"அடிப்படை வசதிகள் கூட இல்லை... 40 வருஷமா இப்படியேதான் இருக்கு" - குமுறும் சிவகங்கை மக்கள்
சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி மதுரை சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 300 முறை பேருந்துகள் வந்து செல்கின்றன. 5000த்திற்க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இப்ப பேருந்து நிலையம் நான்கு பகுதிகளாக இயங்கி வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு முன் காளையார் கோவில்,தொண்டி தேவகோட்டை, பேருந்துகள் நிற்குமிடம், ராமநாதபுரம், மானாமதுரை பேருந்துகள் நிற்கும் இடம் ஆகிய இரண்டு பகுதிகளில் ரூ.74 லட்சத்தில் தகரம் மேற்க் கூரைகள் அமைக்கப்பட்டன. மற்ற இரண்டு பகுதிகளில் தகரம் மேற்கூரைகள் அமைக்க மத்திய முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான பா.சிதம்பரம் மற்றும் சிவகங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி வீதம் இரண்டு கோடி ஒதுகின்றனர். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அமைச்சர் பெரிய கருப்பன் ,கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். இதில் திருச்சி திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும் இடம் மதுரை பேருந்து கொண்டிருக்கும் ஆகிய பகுதிகளில் தகரம் மேற்ககூறைகள் அமைக்கும் பணி நான்கு தோரண வகைகள் மையப்பகுதியில் பயணிகள் அமரும் வகையில் இருக்க வசதிகள் சிசிடிவி கேமராக்கள் பேருந்துகள் வருகையை அறிய டிஜிட்டல் பலகை விலக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்துகின்றன. ஆறு மாதங்களில் இப்பணிகள் முடித்திருக்க வேண்டும் ஆனால் கடந்த மூன்று மாதங்களில் தகரம் மேற்கூரை அமைக்க கீழே கான்கிரீட் தளம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது மற்ற பணிகள் தொடங்கப்படவில்லை பணிகள் மந்தமாக நடப்பதாக புகார் என்பது இதை எடுத்து பணிகளை கார்த்தி சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் அவ்வப்போது ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பணிகள் தாமதத்தால் காலை பள்ளி நேரங்களில் பேருந்துகள் சாலை ஓரங்களில் நின்று பயணிகள் ஏறி இறங்கும் போதும் , பேரூந்துகள் திரும்பும் போதும் போக்குவரத்து நெரிசலில் சிறு சிறு விபத்துகள் தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் தற்போது செயல்படும் பேருந்து நிலையம் பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் மக்கள் மிகவும்
சிரமத்தில் உள்ளனர். தாய்மார்கள் பாலூட்டும் அறையில் டாஸ்மாக் பாட்டில்கள்,
கோடை காலம் என்பதால் குடிக்க தண்ணீரும் இல்லை , கழிப்பறைகளில் உடைந்த கோப்பைகளும் கதவு இல்லாத கழிவறைகள், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த கால்வாய்களில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் சீர்கேட்டில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
பேருந்தில் விரிவாக்க பணியில் கடந்த 2023ம்ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 கடைகள் கட்டப்பட்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் கடைகளுக்கான வைப்புத்தொகை, யாருக்கு இடம் ஒதுக்குவது என்ற பிரச்சனையில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஏலம் விடாமல் இழுபறியில் உள்ள நிலையில் இப்பகுதியில் குடிமகன்கள் ஆக்கிரமித்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.