TNPSC-க்கு புதிய செயலாளர் நியமனம்

Update: 2025-12-31 02:50 GMT

9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக சத்யபிரதா சாகுவும், TNPSC செயலாளராக பானோத் ம்ருகேந்தர் லாலும் (Banoth Mrugender Lal) நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல, நில நிர்வாக ஆணையராக கஜலட்சுமி மாற்றம் செய்யப் பட்டுள்ளார். இளைஞர் நலன் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்