கொடைக்கானலில் மீண்டும் துளிர்த்த நீர்ப்பனி- ரம்மியமான காட்சி

x

கொடைக்கானலில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் நீர்ப்பனி துளிர்த்ததால், ரம்மியமான சூழலை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக பகல் வேளையில் அடர் பனி மூட்டம் நிலவியதால் உறை பனியானது சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை நட்சத்திர ஏரியில் நீர் ஆவியாகி மேலே பறந்து சென்ற காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது.

மேலும் கீழ்பூமி, ஜிம்கானா, பாம்பார் புறம் போன்ற பகுதிகளில் செடி மற்றும் புல்வெளிகளில் முத்து முத்தாக நீர் பனித் துளிகள் காணப்பட்டன. இந்த ரம்மியமான சூழலை சுற்றுலா பயணிகள் மெய்மறந்து கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்