அமலுக்கு வந்தது புதிய FASTag பாஸ் விதி - யாருக்கு பலன்?.. வெளியான முக்கிய தகவல்

Update: 2025-08-15 05:44 GMT

தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் உட்பட, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயிரத்து 228 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.

இங்கு வாகனங்களின் வகைகளின்படி, 6 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வருடாந்திர பாஸ் திட்டம் மூலம், குறைந்தபட்சம் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டும் பயன்பெறும் வண்ணம் இத்திட்டம் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற நினைக்கும் வாகன ஓட்டிகள், Play Store பக்கத்தில் 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற நெடுஞ்சாலை துறையின் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பெற முடியும்.

தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள், ஓராண்டுக்குள் குறைந்தது 30 முதல் 40 சுங்கச்சாவடிகளை பயன்படுத்துபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்