Kodaikal | Banned | கொடைக்கானல் மலையில் புதிய தடை.. கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு
திண்டுக்கல்லில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜூலை 1 முதல் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களை இயக்கினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில், ஹிட்டாச்சி, ஜேசிபி, போர்வெல், பாறை துளைக்கும் இயந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜூலை 1ம் தேதிக்கு முதல் இந்த வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் எனவும், உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு எச்சரித்துள்ளார்