ஒரே நாளில் 272.32 கோடி ரூபாய் வருவாயை பதிவுத்துறை ஈட்டியுள்ளது. அட்சய திருதியை ஒட்டி, புதனன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு 272.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, பத்திரப்பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.