நெல்லையப்பர் கோவில் ஆடி முளைக்கட்டு திருவிழா

Update: 2025-07-18 09:42 GMT

நெல்லையப்பர் கோவில் ஆடி முளைக்கட்டு திருவிழா

நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆடி முளைக்கட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று, நெல்லையப்பர் கோவில். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கட்டுத்திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடி பட்டம் கோவில் உட்பிரகாரத்தில் பல்லக்கில் கொண்டு வந்து மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட சிறப்பாக அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகமும் அலங்கார மகா தீபாரதனையும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வளைகாப்பு உற்சவம் வரும் 21 ஆம் தேதி மதியமும் அன்று இரவு ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறு உள்ளது குறிப்பிடதக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்