Myanmar Love | Nellai Marriage | தமிழக மருமகள் ஆகும் மியான்மர் பெண் | நெல்லையில் கோலாகல திருமணம்

Update: 2025-04-09 16:23 GMT

நெல்லையை சேர்ந்த மணமகனுக்கும், மியான்மரை சேர்ந்த மணமகளுக்கும் நெல்லையப்பர் கோவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் வாசுகி தம்பதியினரின் மகன் மகேஷுக்கு வியட்நாமில் தன்னுடன் பணிபுரியும் நுகின் லீ தய் (NGUYEN LE THUY) என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் வியட்நாமில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் வந்த இருவருக்கும் நெல்லையப்பர் கோவில் முன்பு தமிழ்முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தொடர்ந்து தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துக்கொண்டு புதுமணதம்பதிகளை வாழ்த்தினர்..

Tags:    

மேலும் செய்திகள்