நெல்லை வள்ளியூரை உலுக்கிய ஆண் சடலம்... யார் அவர்? வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-12-20 07:02 GMT

புதிய பேருந்து நிலையத்தில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் அந்தக் குழிக்குள் ஒருவர் இறந்து கிடப்பதாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இறந்தது வள்ளியூர் சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்த 60 வயது முருகன் என்பதும் இவர் வள்ளியூர் நகர பஞ்சாயத்து 9வது வார்டு திமுக செயலாளராக இருந்ததும் தெரிய வந்தது. நேற்று இரவு வீட்டிற்குத் திரும்பும்போது பாதுகாப்பற்ற முறையில் இருந்த செப்டிக் டேங்க் குழியில் விழுந்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்