Nellai | Shocking Msg | ``ரூ.1.61 கோடியா.. எனக்கா?’’ மெசேஜை பார்த்ததும் ஆடிப்போன ஊழியர்

Update: 2025-09-05 04:35 GMT

Nellai | Shocking Msg | ``ரூ.1.61 கோடியா.. எனக்கா?’’ மெசேஜை பார்த்ததும் ஆடிப்போன ஊழியர்

அங்கன்வாடி பணியாளர் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்- அதிர்ச்சி

நெல்லை மாவட்டம், மருதகுளம் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளரின் வீட்டிற்கு ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சோபா என்பவரின் வீட்டில் மின்வாரிய ஊழியர் மின் கட்டணம் கணக்கீடு செய்து விட்டுச் சென்ற பிறகு, அவருடைய செல்போனுக்கு ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் மின் கட்டணம் என குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள், ஷோபா வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது, குளறுபடி நடந்தது தெரியவந்தது. பின்னர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி, 494 ரூபாய் மின்கட்டணம் விதித்து விட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்