நாடு தழுவிய பந்த் - சென்னையில் பஸ் வசதி எப்படி இருக்கு?.. மக்கள் சொன்ன கருத்து
நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.. சென்னையின் 32 பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் சீராக இயங்குவதை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலையில் வழக்கமான போக்குவரத்து காணப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பயணிகள், பொது வேலைநிறுத்தமாக இருந்தாலும் சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தனர்.