Nainar Nagendran | ADMK BJP | "இதே காவி கும்பலுடன்தான் திமுக கூட்டணி வைத்தது" - நயினார் நாகேந்திரன்

Update: 2025-07-15 15:25 GMT

1999ம் ஆண்டு இதே காவி கும்பலுடன்தான் திமுக கூட்டணி வைத்ததாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் காமராஜரின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், அமித்ஷா தமிழகம் வந்த பின்னர் திமுக பதற்றத்தில் இருப்பதாகக் கூறினார். 234 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்