ரூபாய் நோட்டை கிழித்தெறிந்து வினோத கொள்ளை - டாஸ்மாக்கில் கண்ட காட்சி.. கிறுகிறுத்த Police

Update: 2025-04-20 05:11 GMT

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 25 மதுபட்டில்கள், சிசிடிவியின் ஹார்ட் டிஸ்குகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடலையூர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் தான், இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், ரூ.50 நோட்டுகளை கிழித்தெறிந்தது மட்டுமின்றி, ரூ.5 நாணயங்கள் இருந்த பிளாஸ்டிக் பையை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர். குறிப்பாக, மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்களை உடைத்து அதன் ஹார்ட் டிஸ்க்குகளையும் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்