பெண்ணிடம் நகை பறிப்பு - அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி
ஈரோட்டில் மருந்து கடைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் செல்லும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன... பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த நந்தினி வீட்டின் அருகே வளைவில் திரும்பிய போது ஹெல்மெட் அணிந்தபடி பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென நந்தினி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார்.... அப்பொழுது நந்தினி நகையை இழுத்ததால் 3 சவரன் நகை அறுந்து திருடன் கைக்கு சென்று விட்டது... இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் அந்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்...