பைக்கில் பணத்தை வைத்து விட்டு சென்றவருக்கு திரும்பி வந்ததும் ஷாக் கொடுத்த மர்ம நபர்
பைக்கில் பணத்தை வைத்து விட்டு சென்றவருக்கு திரும்பி வந்ததும் ஷாக் கொடுத்த மர்ம நபர்
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். வீடு கட்டும் தொழில் செய்து வரும் இவர், வீடு கட்ட கம்பிகளை வாங்கத் தேவையான பணத்தை பைக்கின் டிக்கியில் வைத்துவிட்டு கடைக்குள் சென்றார். விசாரிக்க சென்ற இடைவெளியில் மர்ம நபர் ஒருவர் அந்த பணத்தை எடுத்து சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.