Son Mother Love Sad | டாக்டர் சொன்ன நொடி மகனுக்கு முன்னே அதிர்ச்சியில் தாய் மரணம்

Update: 2025-03-12 03:33 GMT

நெல்லையில், சிகிச்சையில் உள்ள மகன் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த நிலையில், மகனும் சில மணி நேரங்களில் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்துவிடுவார் என மருத்துவர்கள் அவரது தாயிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மகனும் சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்