203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

Update: 2025-07-04 14:03 GMT

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலுக்கிடையே, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படைகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில், வெடிகுண்டு, கைத்துப்பாக்கிகள் உள்பட 203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் சமீபகாலமாக அடிக்கடி நடந்துவரும் வன்முறை சம்பவங்களின் போது பாதுகாப்பு படைகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இதன் பின்னணியில் மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாட்டுத்துப்பாக்கி, ரைபிள்கள், கைத்துப்பாக்கி, ஐ.இ.டி (IED), கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கை, போராட்டக்குழுக்கள் மற்றும் கடும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் பணியில் முக்கியமான வெற்றியாகும்.

Tags:    

மேலும் செய்திகள்