Monkey Food Feeding | குரங்குக்கு பிஸ்கட் கொடுத்த இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுத்து வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞருக்கு வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தனர். இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோவை நீக்கியதோடு, இனிவரும் காலங்களில் இப்படியான செயலில் ஈடுபடமாட்டேன் என ஜெயச்சந்திரன் என்ற இளைஞர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.