"அமேசானில் வாங்கிய பணம் தயாரிக்கும் மெஷின்" - கை நிறைய ரூ.500, ரூ.200 நோட்டுகள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 500, 200 ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அழகாபுரிபட்டணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மணிகண்டன் என்பவர், அமேசானில் ஜெராக்ஸ் மெஷின் வாங்கி வீட்டிலேயே நோட்டுகளை பிரிண்ட் செய்து, டீக்கடை, மெடிக்கல் கடை போன்ற இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில், மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பிரிண்ட் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்