திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் நாசர், பூமி பூஜையின் போது அருகம்புல் எங்கே என பூசாரியிடம் கேள்வி எழுப்பினார். அறுகம்புல் இல்லாமல் சடங்கு செய்ய கூடாது எடுத்து வாருங்கள் என கூறி காத்திருந்தார். அருகம்புல்லை கொண்டு வந்ததும் அதனை பூஜையில் வைத்து அமைச்சர் நாசர் சூடம் காட்டினார்.