அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பத்திரமாக மீட்பு

Update: 2025-11-16 02:24 GMT

சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமச்சந்திரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவிய நிலையில், 8 வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது தளத்தில் இருந்த மக்களை மீட்க முடியாத‌தால், கிண்டியில் இருந்து ஸ்கைலிப்ட் வரவழைக்கப்பட்டு, மொட்டை மாடியில் இருந்தவர்களை மீட்டனர். 3வது மாடியில் தவித்த வயதானவர்கள் 2 பேரை, ஜன்னல்களை வெல்டிங் மூலம் உடைத்து பத்திரமாக மீட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்