மகா கும்பமேளா - 52 கோடி பக்தர்கள் புனித நீராடல்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா, வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை, 52 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.