Madhuranthagam RDO Office | RDO ஆபீஸ் மொத்தமாக ஜப்தி - சென்னை அருகே பரபரப்பு

Update: 2025-11-12 04:09 GMT

நீதிமன்ற உத்தரவுப்படி மதுராந்தகம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பொருட்கள் பறிமுதல் சென்னையில் உள்ள மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அலுவலக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தென்பட்டினம் பகுதியில், சாலை அமைப்பதற்காக ராஜேந்திரன் என்பவர் இடத்தை அரசு நிர்வாகம் கைப்பற்றியது. கைப்பற்றிய இடத்திற்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை என ராஜேந்திரன் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் அரசு நிர்வாகத்தை கண்டித்த நீதிமன்றம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்த சேர்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்