சந்திர கிரகணம் நிறைவு - நதிகளில் புனித நீராடிய பக்தர்கள்

Update: 2025-09-08 10:44 GMT

சந்திர கிரகணம் நிறைவடைந்ததை ஒட்டி வடமாநிலங்களில் உள்ள நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர்..

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடி வழிபட்டனர். இதன் மூலம் பாவ தோஷங்கள் நீங்கி, நன்மை கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள், கையில் தீபம் ஏந்தி வழிபட்டனர். இதனால், கிரகணத்தின் பாதிப்பு நீங்கிய பிறகு நற்பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் திரண்ட திரளான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர்.. பின்னர் கங்கை அன்னைக்கு ஆரத்தி எடுத்தும், நதியில் தீபத்தை மிதக்க விட்டும் பிரார்த்தனை செய்தனர்.

சந்திர கிரகணம் நிறைவடைந்ததை ஒட்டி, மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அமைந்துள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்