சிவகாசியில் தங்கை முறை கொண்ட இளம்பெண்ணை காதலித்ததாக கூறி இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, தங்கை முறை கொண்ட இளம்பெண்ணை தமிழரசன் காதலித்து வருவது குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மோதல் வெடித்ததாகவும், இதில், அந்த கும்பல் தமிழரசனை கொலை செய்துவிட்டு தலைமறைவானதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.