சென்னை சோழிங்கநல்லூர் அருகே லாரி ஒன்று உரசிச் சென்றதில் பக்கவாட்டில் இருந்த பேருந்து நிழற்குடை மற்றும் கடைகளின் மேற்கூரை சேதமடைந்தன. சிறிய வாகனங்கள் செல்லும் சாலையில் சரக்கு லாரி வந்ததே மேற்கூரை சேதமானதற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், பேருந்து நிழற்குடையை சேதப்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.