டயர் வெடித்து கவிழ்ந்த சரக்கு வாகனம் - விழுந்து சிதறிய உளுந்து மூட்டைகள்
சென்னையில் டயர் வெடித்ததில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விக்னேஷ் என்பவர் மாதவரத்தில் இருந்து உளுந்து மூட்டைகளை ஏற்றி வந்துள்ளார். தாம்பரம் மதுரவாயில் பைபாஸில் வரும்போது, திருநீர்மலை அருகே பின்பக்க டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்தது. இதில் உளுந்து மூட்டைகள் கீழே சிதறி விழுந்தன.