லாக்கப் டெத் "அப்பாவிகளை தண்டிக்க‌க் கூடாது" - சி.பி.ராதாகிருஷ்ணன்

Update: 2025-07-02 05:15 GMT

அப்பாவிகளை குற்றவாளியாக கருதி தண்டிக்கும் போக்கை போலீசார் கைவிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருவரை பார்த்தாலே, குற்றங்களில் ஈடுபட்டிருப்பாரா? இல்லையா? என்று காவல்துறையினருக்கு தெரிந்துவிடும் என்றார். யாரோ சொன்னார்கள் என்பதற்காகவும், ஏதோ அழுத்தம் வருகிறது என்பதற்காகவும் அப்பாவிகளை குற்றவாளிகளாக தண்டிக்க‌க் கூடாது என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்