தாவி குதித்து; வேட்டையாடிய சிறுத்தை - ஷாக்கில் உறைந்து நின்ற பெண் - அதிர்ச்சி காட்சி
கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில், சிறுத்தை ஒன்று கோழிகளை விரட்டி விரட்டி வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரத்திலிருந்து தாவி கோழி கூட்டை நோக்கி பாய்ந்து வந்த சிறுத்தையை கண்ட வளர்ப்பு நாய் குரைத்துக் கொண்டிருந்தது. பின்பு அங்கு வந்த பெண், கோழிகளை சிறுத்தை வேட்டையாடுவதைக் கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே, சிறுத்தையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.