Cheetah | கேட்டின் மேல் ஏறி வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை - நடுநடுங்கிய மக்கள்.. அதிர்ச்சி வீடியோ
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை இரை தேடி உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் வீட்டு வளாகத்தில் சுற்றி திரிந்த சிறுத்தை கேட்டின் மீது ஏறி பிரதான சாலையில் நடந்து சென்ற வீடியோ காட்சிகள் பதிவாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.