Kovai ``பெருமாளே அந்த பாறையா இருக்காரு..’’ ஒவ்வொரு புரட்டாசிக்கும் கோவைக்கு படையெடுக்கும் மக்கள்

Update: 2025-10-09 06:20 GMT

Kovai ``பெருமாளே அந்த பாறையா இருக்காரு..’’ ஒவ்வொரு புரட்டாசிக்கும் கோவைக்கு படையெடுக்கும் மக்கள்

பெருமாள்முடி" - புரட்டாசி மாதத்தில் கோவையில் ஒரு ஆன்மீக ட்ரிப்!

கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் முடி கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் சவால்களைத் தாண்டியும் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி அருகே மாங்கரை அடுத்த சேம்புகரை கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயர மலையின் மீது அமைந்துள்ளது தான், "பெருமாள் முடி". கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் ரம்மியமான மலையில் அமைந்துள்ள பெருமாள் முடி கோயிலில், சுமார் 40 அடி உயரத்தில் உள்ள மிகப்பெரிய பாறையை, பக்தர்கள் பெருமாளாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்கு செல்வதற்கு 'Trek TamilNadu' என்ற இணையதளம் மூலமாக ஆயிரத்து 400 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்