kovai | awareness | மதுபான பாட்டில்களின் வேடங்களை அணிந்து விழிப்புணர்வு.. வியந்து பார்த்த மக்கள்..
போதைக்கு எதிராக மதுபான பாட்டில்களின் வேடங்களை அணிந்து விழிப்புணர்வு மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் - பேரணியை துவக்கி வைத்த காவல் உதவி ஆணையர்
கோவையில் போதைக்கு எதிராக மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை மற்றும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் காவல்துறை மற்றும் ட்ரினிட்டி பள்ளி மாணவர்கள் சார்பில் சமூக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை கோவை மாநகர காவல் உதவி ஆணையர் திருநாவுக்கரசு, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சாலை பாதுகாப்பு,போதை இல்லாத தமிழ்நாடு,பெண்களை பாதுகாப்போம்,சுற்றுச்சூழலை காப்போமம்,அமைதியான சமூகத்தை உருவாக்குவோம், உள்ளிட்ட தலைப்புகளில் மதுபானம், சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ட்ரினிட்டி பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி புளியகுளம் விநாயகர் கோயில் வரை நடைபெற்றது.இந்த பேரணியில் சமூக விழிப்புணர்வு கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதையும், மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.