Kerala | கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் குழிதோண்டி புதைக்கப்பட்ட பெண்

Update: 2025-06-16 05:33 GMT

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் தமிழக கேரள எல்லையில் பெண் ஒருவர் குழிதோண்டி புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த பிரியம்வதா என்ற பெண் கடந்த 12ம் தேதி மாயமானார். போலீசார் தேடி வந்த நிலையில், அண்டை வீட்டைச் சேர்ந்த சரஸ்வதி தனது வீட்டை ஒட்டிய பகுதியில் ரத்த கறைகள் காணப்படுவதாக தெரிவித்தார். போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். ரத்தக்கறைகளுடன் தலைமுடியும் காணப்பட்ட நிலையில் சரஸ்வதியின் மருமகன் வினோத்தை போலீசார் விசாரித்தனர்... விசாரணையில் பிரியம்வதாவை வினோத் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்... வினோத்துக்கு தான் கொடுத்த பணத்தை பிரியம்வதா திருப்பிக் கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை மறைத்துள்ளார். பின்னர் போலீசார் வீட்டருகே குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சடலத்தை மீட்டு வினோத்தையும், சடலத்தை புதைக்க உதவிய அவரது சகோதரர் சந்தோஷையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்