காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவு

Update: 2025-09-09 01:49 GMT

Kanchipuram DSP | காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவு

வன்கொடுமை தடுப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்யத் தவறிய காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் நடந்த அடிதடி வழக்கில், சிவா என்ற பேக்கரி உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் அவர்கள் கைது செய்யப்படாததால், பாதிக்கப்பட்ட முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்