Kallanai Open| "சூரிய அஸ்தமனத்தில் கல்லணை திறப்பு.. மரபு மீறல்" - பரபரப்பை கிளப்பிய பி.ஆர்.பாண்டியன்
கல்லணை திறப்பில் மரபு மீறல் என பி.ஆர்.பாண்டியன் கருத்து
சூரிய அஸ்தமனத்தில் கல்லணையை திறப்பது மரபை மீறிய செயல் என்று, தமிழக விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் கேட்பதால் கடன் பெற முடியாத சூழல் உள்ளது என்று தெரிவித்தார். வேளாண் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.