கள்ளக்குறிச்சி ஜங்ஷனில் வண்டியை மறித்த எமதர்மராஜா..? "ஜாக்கிரதை" என மக்களுக்கு அட்வைஸ்
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் எமதர்மராஜா வேடமணிந்து தலைக்கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது எமதர்மராஜா வேடமணிந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பாசகயிறு தங்கள் மீது வீசப்படும் என்று வாகன ஓட்டிகளிடம் கூறினார்.