திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் ஏற்பாட்டில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டன. அதேபோல் நகர்மன்ற துணை தலைவர் பாரி பாபு ஏற்பாட்டில், அதிமுக கட்சியினர் ஊர்வலம் சென்றனர். ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தியபின், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.