``அதை மறந்து விடாதீர்கள்'' - திடீரென சீனுக்குள் வந்த திருச்சி சிவா

Update: 2025-04-18 06:44 GMT

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை என, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவரின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில், எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது என்றும், திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்