Isro | Narayanan | "2035-ல் திட்டமிட்டபடி.." - விருது வாங்கிய பின் செம அப்டேட் கொடுத்த இஸ்ரோ தலைவர்
வரும் 2035-ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி விண்வெளி மையத்தை இந்தியா நிறுவும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழாவில் அவருக்கு அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், தனது குழுவினருக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும், இஸ்ரோவின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.