தங்களுக்கு எதிரான கூட்டு சதியை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது. ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டவை..... அனைத்து குற்றச்சாட்டுகளும் போலியானவை என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளையில் தன்னார்வலர்களாக இருந்த சிலர் புகார்களின் அடிப்படையில் நீக்கப்பட்டனர் என்றும், இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், வன்மத்துடன் திட்டமிட்டு கூட்டாக இணைந்து அவதூறு பரப்பி வருவதாகவும் ஈஷா யோகா மையம் கூறியுள்ளது.