ஈஷா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விவகாரம்.. விசாரிக்க கோரி மனு

Update: 2025-01-21 12:57 GMT

கோவை ஈஷா யோகா மையத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர், கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி, கோவை மாவட்ட காவல் துறை நாளிதழில் வெளியிட்டிருந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், காவல் துறை தரப்பில் தகவல் கேட்டு பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்