பொதுச் செயலாளாராக ஈபிஎஸ் தொடர்வதில் சிக்கலா? - தீர்ப்பு சொல்லும் ஐகோர்ட்

Update: 2025-09-04 02:28 GMT

பொதுச் செயலாளாராக எடப்பாடி தொடர்வதில் சிக்கலா? - தீர்ப்பு சொல்லும் ஐகோர்ட்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்