டோல் கட்டணம் நிலுவையா? - காத்திருக்கும் பெரிய ஆப்பு
சுங்க கட்டண நிலுவைத் தொகைய உடனடியாக செலுத்தலனா வாகன ஓட்டிகள் கூடியசீக்கிரம் சில பிரச்சினைகள சந்திக்க நேரிடபோது. இதுக்காக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய விதியைக் கொண்டுவரத் தயாராகியிருக்கு. அது என்ன ? இந்த புதிய விதி அமலுக்கு வந்தா என்ன மாதிரியான சிக்கல்கள் வரும்னு பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே சுங்கச் சாவடிகள்ல கட்டண வசூல் முறையில நிறைய மாற்றம் வந்துருக்கு. FASTag கட்டண முறை அமலுக்கு வந்த பிறகு சில்லறை பிரச்சினை, ரொம்ப நேரம் சுங்கச் சாவடியில் காத்திருப்பது போன்ற சிரமங்கள்லா குறைந்தது. ஆனாலும் சில வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்துவதுல மெத்தனமா இருக்காங்க. இதைலா தடுக்கதான் இப்ப ஒரு முக்கிய அறிவிப்பு வந்துருக்கு.
சுங்கக் கட்டணத்த டிஜிட்டல் முறையில வசூலிப்பத ஊக்குவிக்கும் விதமாவு, சுங்கச் சாவடிகள்ல கட்டணம் செலுத்தாம யாரும் இலவசமா பயணிக்கக் கூடாது என்பத உறுதி செய்யும் நோக்கத்துலையு, மோட்டார் வாகன விதிகள்ல மாற்றத்த அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுருக்கு.. சுங்க கட்டணம் செலுத்தாதவர்கள வாகனத்துடன் தொடர்புடைய பிற சேவைகள வழங்குவதற்கு முன்னாடியே தடுக்கனும், என்பதுதா அமைச்சகத்தின் இந்த புதிய வரைவு விதியியோட நோக்கம்.
அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள்ல சுங்கச் சாவடி கட்டண பாக்கி உள்ள வாகன உரிமையாளர்கள் RC, காப்பீடு புதுப்பிப்பு, உரிமம் மாற்றம் மற்றும் Fitness Certificate போன்ற முக்கிய சேவைகள பெற முடியாது.
தேசிய நெடுஞ்சாலைகள்ல சுங்கக் கட்டணம் செலுத்த, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் , பல வழித்தடங்கள்ல Multi-Lane Free Flow-ன்ற இலவச போக்குவரத்து முறைய அறிமுகப்படுத்தி வருது. இதனால சுங்கக் கட்டணம் வசூலிக்க, வாகனங்கள நிறுத்த எந்தவிதமான தடையுமே இருக்காது. இந்த சூழல்லதான், இந்த நடவடிக்கை மேலும் முக்கியத்துவம் பெறுது.
MLFF ஐ வெற்றிகரமாக ஆக்க, ஒவ்வொரு வாகனமும் செல்லுபடியாகும் FASTag -அ நிறுவி சரியான நேரத்துல சுங்க கட்டணம் செலுத்தனும். இதற்காக, அரசு இப்போ மோட்டார் வாகன சேவை தொடர்பான அனுமதிகள சுங்க கட்டணத்தோட இணைக்க தயாராகிட்டு வருது.
அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ், வாகன உரிமையாளர்கள் தங்களோட நிலுவையிலுள்ள சுங்க கட்டண விவரங்கள ஆன்லைன் போர்டல் or மொபைல் ஆப் மூலம் பார்க்க முடியும்.
FASTag -ஓட தொடர்புடைய தரவுகள் அடிப்படையில, சுங்க கட்டண விவரங்கள் சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரியோட அமைப்புல நேரடியா கிடைக்கும். வாகனப் பதிவு அதிகாரிகள், மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான கோரிக்கையோ , RC-க்கான கோரிக்கையோ பரிசீலிக்க மாட்டாங்க. ஏன்னா நிலுவையில இருக்க சுங்கக் கட்டணம் அந்த வாகனத்துக்கு எதிரா காட்டுச்சுனா, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படும். நிலுவையில இருக்க சுங்க கட்டண பாக்கிய கட்டுனா மட்டுமே NOC வழங்கப்படும்.
அதுமட்டுமில்லாம சாலை அமைச்சகத்தின் திட்டத்துல ,காப்பீட்டு நிறுவனங்களையும் FASTag அமைப்புடன் இணைப்பது அடங்கும். இது மூலமா ,பாலிசி புதுப்பிக்கும் நேரத்துல , தொடர்புடைய வாகனத்திற்கு சுங்க கட்டணம் நிலுவையில இருக்கா இல்லையானு அவங்களுக்கு தெரியும். இதுபோன்ற நிலையில, வாகனத்தோட சுங்க கட்டணம் clear-ஆன மட்டுமே insurance-அ புதுப்பிக்க முடியும்.
மேலும் வாகனத்துல சரியான FASTag ஒட்டலைனாலோ , நிலுவையில் உள்ள அபராதம் காரணமா சுங்கக் கட்டணம் செலுத்தலைனாலோ, அந்த வாகனம் சுங்கச் சாவடியைக் கடந்து சென்ற பிறகு, அது நிலுவையில் உள்ள கட்டணமாவே காட்டும்னும் சொல்லபடுது. வாகன ஓட்டிகள், FASTag ஸ்டிக்கர கட்டாயம் வாகனத்தோட முன்பக்க கண்ணாடியில் ஒட்டனும்னு ,இந்த விதிமுறைய மீறும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்னு ஏற்கனவே சொல்லபட்டுருந்துச்சு.
அதனால வாகன ஓட்டிகள், FASTAG ஸ்டிக்கர முறையா பயன்படுத்துனா தேவையற்ற சிக்கல்கள தவிர்க்கலாம். அதுனால FASTag செயல்பாட்டுல இருப்பத CONFIRM பன்னிகிட்டு, சுங்கச் சாவடிக் கட்டணத்த சரியா செலுத்துறது அவசியம். இல்லைனா வாகனத்தோட எதிர்கால சேவைகள்லா பாதிக்கப்படலாம்.