"நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்?" - சீமான் ஆவேசம்

Update: 2025-07-11 10:13 GMT

"நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்?" - சீமான் ஆவேசம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் 1075 நாட்களுக்கு மேலாக போராடி வருமவதாகவும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் எனவும் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மக்களுக்கான அரசு போல செயல்படாமல் பெரு நிறுவன கார்ப்பரேட் கட்டமைப்பு போல அரசு செயல்பட்டு வருகின்றது எனவும் சீமான் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்