IPhone 17 Series | அடேங்கப்பா புது ஐபோனில் இவ்ளோ வசதிகளா?. விலை தான் ஹைலைட்
ஆப்பிள் நிறுவனம், மிகவும் ஸ்லிம்மான iPhone Air போனை அறிமுகம் செய்துள்ளது. இது வெறும் 5 புள்ளி 6 மில்லிமீட்டர் அகலமும், 145 கிராம் எடையும் கொண்டுள்ளது. 6.5-இன்ச் OLED 120Hz ProMotion டிஸ்ப்ளே, MagSafe சார்ஜிங் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. மிகவும் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன், ஸ்பேஸ் பிளாக், கிளவுட் ஒயிட், லைட் கோல்ட், ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு கலர்களில் 256GB முதல் 1TB வரை ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது. இதன் இந்திய விலை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 900 முதல் தொடங்கும் நிலையில், செப்டம்பர் 19 முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.