டாய்லெட்டுக்கு உள்ளே `சரக்கு சாம்ராஜ்ஜியம்’ - குடலை புரட்ட வைத்த கிரைம்

Update: 2025-08-14 02:15 GMT

கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.2.76 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஒரு வீட்டின் டாய்லெட் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அகமதாபாத்தில் உள்ள பரேஜா என்ற கிராமத்தில், ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில், இந்திய பாணியில் கட்டப்பட்ட டாய்லெட் இருக்கைக்கு கீழே மதுபானங்கள் பதுக்கப்பட்டது தெரியவந்தது. மேலே டாய்லெட் இருக்கை போன்று காட்சி அளித்தாலும், அதனை தூக்கிய போது கீழே பெரிய அறை இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2 லட்சத்து 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்