திண்டுக்கல்லில் பட்டப்பகலில்.. மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு நடந்த பயங்கரம்

Update: 2025-06-20 06:07 GMT

திண்டுக்கல் மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் ஹேன்ட் பேக்கை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் ஹேன்ட் பேக்கை hand bag பறித்துக்கொண்டு முகமூடி கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். திமுக கவுன்சிலர் சுபாஷினி, மதிமுக கவுன்சிலர் காயத்ரி ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவர்களை வழிமறித்த முகமூடி கொள்ளையர்கள், ஹேன்ட் பேக்கை அபகரித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்