``காதலனை கல்யாணம் பண்ணிட்டேன்'' - தாலி கட்டும் நேரத்தில் சுயரூபத்தை காட்டிய IT பெண்

Update: 2025-07-07 03:11 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணப்பெண் காணாமல் போன நிலையில், தன் காதலனை திருமணம் செய்த போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். புலியூர்க்குறச்சியை சேரந்தவர் ஷைனிபிரியா. இவர் கோவையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவருக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று, திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், திருமணத்திற்கு முதல் நாள் ஷைனிபிரியா திடீரென மாயமானார். பின்னர் தன் காதலனுடன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அப்புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் இரு வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்