இரட்டை பெண் பிள்ளைகளுக்கு ஆதார் பெற முடியாமல் தவிக்கும் தாய்
ஈரோடு அருகே இரட்டை பெண் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகளாக ஆதார் அட்டை பெற விண்ணப்பித்தும் பெற முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க ஒரு தாய் புலம்பியது சோகத்தை ஏற்படுத்தியது... பவானி குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி தனது இரட்டை பெண் பிள்ளைகளான மோனிஷா மற்றும் மோனிகாவுக்கு ஒரே மாதிரியாக கைரேகைகள், கருவிழி இருப்பதால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்...