``துணிய ரிட்டன் வாங்க மாட்டியா’’ Boy Friend கையில் கத்தி கொடுத்து அனுப்பிய பெண்
``துணிய ரிட்டன் வாங்க மாட்டியா’’ Boy Friend கையில் கத்தி கொடுத்து அனுப்பிய பெண்
துணியை ரிட்டன் வாங்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டல்
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் கடைக்காரர்கள் துணியை ரிட்டன் வாங்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட கடையில் மேக்னா மகீஜா என்ற பெண் கடந்த மாதம் 32 ஆயிரம் கொடுத்து லெஹங்கா வாங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து துணி பிடிக்கவில்லை என கூறி பணத்தை திருப்பி தருமாறு கோரியுள்ளார். கடைக்காரர்கள் ஏற்க மறுத்த நிலையில், அவரின் ஆண் நண்பரான சுமித் சயானி கடைக்கு நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும், கடைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விடுவேன் என மிரட்டி 3 லட்சம் வரை கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் இளைஞரை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்துள்ளனர்.